டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனை செய்ய இனி இது கட்டாயம்! RBI வெளியிட்ட உத்தரவு

0
97

டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனை செய்ய இனி இது கட்டாயம்! RBI வெளியிட்ட உத்தரவு

 

இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வப்போது பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.அந்த வகையில் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது கார்டு தகவல்களை வணிக சேவையை வழங்கும் நிறுவனங்கள் சேமித்து வைத்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்து வந்தது.இதன் மூலமாக அடுத்தடுத்த பரிவர்த்தனை சுலபமாக செய்ய முடியும் என்பதால் பயனாளர்களும் இதை அனுமதித்து வந்தனர்.

 

ஆனால் வாடிக்கையாளர் அனுமதியில்லாமல் தானாகவே பணம் எடுக்கப்படும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருவதை அறிந்த RBI இதற்கான புதிய வழிமுறைகளையும் வகுத்துள்ளது. அந்த வகையில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன் செய்வதற்கான விதிமுறையை கடந்த ஆண்டு வகுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதாவது கார்டு பரிவர்த்தனையில் ஈடுபடும் எந்தவொரு வணிகரும் வாடிக்கையாளரின் அட்டைத் தரவை இனி சேமிக்க முடியாது,சேமிக்கவும் கூடாது என்பதே இந்த டோக்கனைசேஷனாகும்.அனைவரும் இதனை பின்பற்ற இதற்கான காலக்கெடுவாக இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 

 

அதே நேரத்தில் RBI அறிவுறுத்திய இந்த டோக்கனைசேஷனுக்கு மாறும் வகையில் அதிக அவகாசம் தேவை எனவும் எழுந்த தொழில்துறை அமைப்புகளின் கோரிக்கையைத் தொடர்ந்து இது ஜூலை 1 வரை நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்கு பிறகு வாடிக்கையாளர்களின் கார்டு தரவை வணிகர்கள் தங்கள் சர்வர்களில் சேமித்து வைப்பதை இந்திய ரிசர்வ் வங்கி தடை செய்கிறது.

 

 

இதனைத்தொடர்ந்து கார்டு-டோக்கனைசேஷன் நடைமுறைக்கு வருவதால் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை செய்யும் முறையில் மாற்றம் ஏற்படவுள்ளது. இதனால் இனி இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டோக்கனைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகள் நடைபெறும். இந்த புதிய விதிமுறைகளால் பண பரிவர்த்தனை பாதுகாப்பாக இருக்கும் என்பதை அறிந்து பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.