ரெப்போ வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி! வாகனம் மற்றும் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் எகிறும் அபாயம்!

0
57

ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் என்ற புதன்கிழமையன்று ஆரம்பமானது 3 தினங்களுக்கு நடந்த இந்த கூட்டம் நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது நாட்டின் பண வீக்கத்தை குறைப்பதற்காகவும், பண புழக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதன் மூலமாக தற்சமயம் ரெப்போ வட்டி விகிதம் 4. 90% இருந்து 5.40 சதவீதமாக அதிகரிப்பதற்கு ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இந்த ரெப்போ வட்டி உயர்வுக்கு ஆதரவாக நிதி கொள்கை குழுவின் 6 உறுப்பினர்களும் வாக்களித்தார்கள்.

அதோடு அவர் விலைவாசி உயர்வு சற்றே குறைய தொடங்கினாலும் பொதுமக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் நிலையில் தான் இருக்கிறது. இந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பணவீக்க விகிதமும் 6.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது, அடுத்தடுத்த காலாண்டுகளில் பண வீக்கம் மெல்ல, மெல்ல குறையும் எனக் கூறியிருக்கிறார்.

அதேபோன்று வங்கிகளில் கடன் வளர்ச்சி என்பது சென்ற வருடத்தில் 5.5 சதவீதமாக இருந்தது ஆனால் இந்த வருடத்தில் அது 14 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. டாலர் மதிப்பு, சர்வதேச சூழ்நிலை வெளியிட்டவற்றை காரணமாக, கொண்டுதான் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கிறது. இந்திய பொருளாதாரம் பலமாக தான் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ரெப்போ ரேட் அதிகரிப்பானது வங்கி கடன் பெறும்போது மக்கள் பலரை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்திருக்கிறது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி அதிகரித்திருப்பதால் கூடுதல் வட்டியை கட்டுவதற்கு வங்கிகள் அந்த வட்டிச் சுமையை தங்களுடைய வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தும். அதாவது ரெப்போ வட்டி உயர்ந்ததால் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விளித்தவற்றை வங்கிகள் அதிகரிக்கும்.

ரெப்போ வட்டி குறைந்தால் வாடிக்கையாளர்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும். தற்சமயம் ரெப்போ உயர்த்தப்பட்டிருப்பதால் வங்கிகள் வீட்டுக் கடன் வாகன கடன் கொடுத்ததற்கான வட்டியை அதிகரிக்கும். இது வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும் விதமாக இருக்கிறது.