பூண்டை அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகள்! 

0
229
raw garlic side effects
raw garlic side effects

பூண்டை அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகள்!

நமது உணவில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் மருந்தாகவும் பயன்படும் நாம் அறிந்ததே.ஆனால் அதே பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது நமக்கு பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் உண்மையே.அந்த வகையில் பல்வேறு நன்மைகளை தரும் பூண்டை நாம் அதிகமாக உண்பதால் சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஒரு சிலருக்கு உடலில் துர் நாற்றம் வீசும்.இதற்கு அவரது உடலை சரியாக பராமரிக்கவில்லை என்று கூறினாலும்,உண்மையான காரணம் அவர் பூண்டை அதிகமாக உட்கொண்டதாகவே இருக்கும்.

அளவுக்கு அதிகமாக ஒருவர் பூண்டை சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உள்ளிட்டவைகள் உண்டாகலாம். அதாவது பூண்டில் உள்ள அல்லிநேஸ் என்னும் என்சைம், பொதுவாக சம்பந்தபட்ட நபரின் உடலில் சரும தடிப்பை  ஏற்படுத்தக் கூடியதாகும்.

ஒருவர் பச்சையாக பூண்டை உட்கொள்வதால் அவருக்கு தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஒருவர் பூண்டை சாப்பிட்டவுடன் தலைவலி உண்டாகாது. ஆனால் தலைவலி உண்டாகும் செயல்பாட்டை இது ஊக்குவிக்கலாம்.

மேலும் ஒருவர் பச்சை பூண்டை அப்படியே சாப்பிடுவதால், முக்கோண நரம்பு தூண்டப்பட்டு நியுரோபெப்டிடு வெளியாவதை ஊக்குவிக்கிறது. இது மனிதரின் மூளையை  மூடியிருக்கும் தோல் பகுதியை அடைந்து தலைவலியை உண்டாக்குகிறது.

குறிப்பாக பூண்டை அதிகமாக உட்கொள்வதால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.சில நேரங்களில் இது இரைப்பை பாதிப்பையும் ஏற்படுத்தும்.இது மட்டுமல்லாமல் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது வாந்தி,குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும்.

author avatar
Parthipan K