ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உறுதியானது நோய்த்தொற்று! இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா!

0
81

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இங்கிலாந்துக்கு எதிராக விரைவில் நடைபெறும் 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக அவர் செல்லவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது அஸ்வின் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

அனைத்து நடைமுறைகளையும், விதிமுறைகளையும், கடைபிடித்த பிறகுதான் அஸ்வின் இந்திய அணியுடன் இணைவார் என்று தகவல் கிடைத்திருக்கிறது, இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்திற்கு சென்றுவிட்டது.

அஸ்வின் புறப்படுவதற்கு முன்னர் நோய் தொற்று பரிசோதனை செய்ததில் அவருக்கு தோற்று உறுதியானதால் இங்கிலாந்து நாட்டிற்கு இந்திய அணியுடன் அவர் பயணம் செய்யவில்லை. ஆனால் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர் குணமடைவார் என்று நம்புவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் உள்ளிட்டோர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டிருக்கிறது. பிசிசிஐ லீசெஸ்டர்ஷைர் கவுண்டி மைதானத்தில் இருவரும் விளையாடியதால் டெஸ்ட் போட்டியிலும் இந்த ஜோடி இந்தியாவுக்கான இன்னிங்சை ஆரம்பிக்கவுள்ளது.

இந்திய அணி ஜூன் மாதம் 24 ஆம் தேதி முதல் லீசெஸ்டர்ஷையருடன் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவிருக்கிறது. வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அணியை வழிநடத்துவது இதுதான் முதல்முறை என்று சொல்லப்படுகிறது.