”ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்”… ரவி சாஸ்திரியின் கருத்து சரியா?

0
99

”ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்”… ரவி சாஸ்திரியின் கருத்து சரியா?

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

டி 20 கிரிக்கெட் போட்டிகளின் அறிமுகத்துக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளுக்கான மவுஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த மாதிரி உள்ளது. இதனால் வீரர்கள் பலரும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை. ரசிகர்கள் மத்தியிலும் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படும் என சொல்லப்படுகிறது.

இதை உறுதிப்படுத்துவது போல தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வறித்தது கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பல முன்னாள் வீரர்களும் ஒருநாள் போட்டிகளை முற்றாக நிறுத்திவிட வேண்டும் எனக் கூறிவருகின்றனர். பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் இந்த கருத்தைக் கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ஒருநாள் போட்டிகளை ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்த 50 ஓவர்கள் இல்லாமல் 40 ஓவர்கள் என்று மாற்றவேண்டும்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.