தமிழக அரசுக்கு எல்.முருகன் வைத்த முக்கிய கோரிக்கை!

0
79

தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக கொடுக்கும் பணத்தை நியாயவிலைக் கடைகளின் மூலமாக கொடுக்காமல் வங்கிக் கணக்குகள் மூலமாக அதனை பொது மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நேற்றைய தினம் சென்னையில் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றிய அவர் தமிழக அரசு நோய்த்தொற்று நிவாரண நிதியாக கொடுக்கும் ரூபாய் 4 ஆயிரத்தை நியாயவிலைக் கடைகளின் மூலமாக நேரடியாக வழங்கப்படுகிறது. அங்கே பொதுமக்கள் ஒன்று கூடுவதால் நெருக்கடி உண்டாகிறது. இதனை தவிர்ப்பதற்காக பிரதமரின் விவசாயிகள் உதவிதொகை திட்டத்தை செயல்படுத்தியதைப்போல மாநில அரசு பணத்தை நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்குகளில் செலுத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதோடு தேர்தல் சமயத்தில் திமுகவால் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகை 1000 ரூபாய் என்பது வழங்கப்படும் என்று ஆவலாக எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் முருகன்.

அதோடு பிரதமரின் உரையை தொடர்ந்து நேற்று இரவு முருகன் வெளியிட்ட ஒரு காணொளியில் ஜூன் மாதம் 21ஆம் தேதி முதல் தடுப்பூசிகளை எல்லோருக்கும் இலவசமாக வழங்குவோம் என்று அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நோய்களில் இருந்து மீண்டு வருவதற்கு மத்திய அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. அதோடு வரும் நவம்பர் மாதம் வரையில் நியாயவிலைக்கடை பொருட்களை இலவசமாக வழங்குவதாகவும், இதனால் 80 கோடி மக்கள் பயன் பெறுவார்கள் எனவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதற்காக தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியையும், பாராட்டுக்களையும், தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் முருகன்.