இந்த ராசிகாரர்கள் கடினமான சொற்களை பயன்படுத்த வேண்டாம்! இன்றைய ராசிபலன்

0
134
Rasipalan Today-News4 Tamil Latest Online Tamil News
Rasipalan Today-News4 Tamil Latest Online Tamil News

இந்த ராசிகாரர்கள் கடினமான சொற்களை பயன்படுத்த வேண்டாம்! இன்றைய ராசிபலன்

மேஷம்:

மேஷ ராசிகாரர்களே இன்று உங்களுக்கு நிதி நிலைமை நன்றாக இருக்கும்.விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.முதலீடு சம்பந்தமான எதிர்கால திட்டங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.வீட்டில் அமைதி மற்றும் மகிழ்ச்சி பெருகும் நன்னாள்.நல்ல செய்தி வர வாய்ப்புள்ளது.

ரிஷபம்:

ரிஷப ராசிகாரர்கள் இன்று கவனமுடன் இருக்க வேண்டும்.மன வலிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.வெளிநாட்டில் சொத்து வைத்திருப்பவர்களுக்கு நல்ல விலை கிடைக்கலாம்.குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்சிகளில் பங்கு கொள்ளலாம்.கணவன் மனைவியிடையே சிறு சண்டைகள் ஏற்படலாம்.முன் பின் தெரியாதவர்களுடன் வாக்கு வாதம் செய்ய வேண்டாம்.

மிதுனம்:

மிதுன ராசிகரர்கள் இன்று உடல்நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும்.பாக்கிகள் வசூலாகும்.நீங்கள் அதிகமாக நம்பிக்கை வைத்த ஒருவர் கைவிட வாய்ப்புகள் உண்டு.தேவையில்லாத காரணத்திற்காக மனைவியுடன் வாக்கு வாதம் ஏற்படலாம் அதனால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கடகம்:

கடக ராசிகாரர்களே! இன்று உங்களின் மனபலத்தை ஆதிகரிக்க ஆன்மிகம்,யோகா உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த நேரிடலாம்.நிலுவையில் இருத்த கடன்கள் வசூல் ஆகலாம்.சட்ட ஆலோசனைக்காக வழக்கறிஞரை சந்திக்கலாம்.கணவன் மனைவி கொஞ்சம் விட்டு கொடுத்து செல்லுதல் நன்மை தரும்.

சிம்மம்:

சிம்ம ராசிகாரர்களே! உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் நாளாக இருக்கும்.நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் வந்து சேரும்.இன்று அதிகமாக கோபம் ஏற்பட வாய்ப்புள்ளது.அருகிலுள்ளவர்கள் கடினமான சொற்களை பயன்படுத்த நேரிடலாம்.குறிப்பாக சில ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.

கன்னி:

கன்னி ராசிகாரர்களே! இன்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.ரகசிய தகவல்கள் எதையும் மற்றவர்களிடம் பகிர வேண்டாம்.உங்களை தேடி சில வாய்ப்புகள் வரும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.இன்று தோல்விகளிலிருந்து சில பாடங்களை கற்று கொள்வீர்கள்.

துலாம்:

துலாம் ராசிகாரர்களே! நீங்கள் இன்று மன தைரியத்துடன் செயல்பட வேண்டிய நாள்.ஏற்கனவே போட்ட முதலீட்டிலிருந்து வருமானம் வரும்.வீண் பேச்சுகாரர்களை நம்பாதீர்கள்.புதிய திட்டங்கள் தீட்ட வாய்ப்புண்டு.வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்.துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடலாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிகாரர்களே! இன்று நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த நேரிடும்.உங்களுடைய பொருளாதார நிலை மந்தமாகவே இருக்கும்.குடும்பத்தினருடன் சுப நிகழ்சிகளில் கலந்து கொள்ளலாம்.புதிய ஐடியாக்கள் சில உங்களுக்கு பலனளிக்கும்.தேவையில்லதாக காரணத்திற்காக மனைவியுடன் விவாதம் செய்ய வேண்டாம்.

தனுசு:

தனுசு ராசிகாரர்களே! இன்று உங்களுக்கு பண விவகாரங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம்.குடும்பத்தினர் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள்.எதிர்பார்த்த நேர்காணல் அழைப்பு வர வாய்ப்புள்ளது.நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.பெண்களுடன் பேசும் போது கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

மகரம்:

மகர ராசிகாரர்களே! இன்று உங்களுக்கு பழைய மோசமான நினைவுகள் வந்து மனக்குழப்பத்தை ஏற்படுத்தலாம்.சரியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.கணிசமான அளவில் பண வரவு உண்டாகும்.வீட்டில் சுப நிகழ்சிகள் நடக்கலாம்.உங்களின் பணிகளில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கும்பம்:

கும்ப ராசிகாரர்களே! இன்று வேலை செய்யுமிடத்தில் சில சிக்கல்கள் உருவாகலாம்.வீட்டில் உள்ள பிரச்சினை காரணமாக மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புண்டு.நிதி நிலைமை சுமாராக இருக்கும்.நண்பர் ஒருவரின் வருகையால் சில சிக்கல்கள் ஏற்படலாம்.தான தர்மம் செய்வதால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மீனம்:

மீன ராசிகாரர்களே!இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.உடல்நலம் சீராக இருக்கும்.கடந்த காலத்தில் செய்த முதலீட்டிற்கு தற்போது பலன் கிடைக்கும்.இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

author avatar
Parthipan K