இந்த ராசிகாரர்களுக்கு இன்று அதிரடி யோகம்! இன்றைய ராசிபலன் 23.09.2020

0
57
Rasipalan Today
Rasipalan Today

இன்றைய ராசிபலன் (23/9/2020)

இன்றைய ராசிபலன் 23.09.2020 புரட்டாசி-7 புதன் கிழமை

மேஷம்

மேஷம்: மேஷ ராசிகாரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் அவ்வப்போது சிறுசிறு ஏமாற்றமும் வந்து போகும். மேலும் குடும்பத்தில் பல பிரச்சனைகளை நீங்களே சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரம் செய்பவர்கள் உங்கள் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். வேலைக்கு செல்வோர் உங்கள் உத்தியோகத்தில் அவ்வப்போது சிறுசிறு இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். மொத்தத்தில் இன்று உங்களுக்கு மிகவும் பொறுமை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ரிஷப ராசிகாரர்களாகிய நீங்கள் இன்று உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணரும் நாள். குழந்தைகளுக்கு பொறுப்புணர்வு அதிகமாகும். மனைவி மற்றும் அவர்களின் வழியில் நல்ல செய்தி வர வாய்ப்புள்ளது. திருமண பேச்சு வார்த்தை உங்களுக்கு சாதகமாக முடிய வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணி ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. மொத்தத்தில் இன்று உங்களின் திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மிதுன ராசிகாரர்களாகிய உங்களின் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் உங்களுக்கு அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக நடைபெற்று வரும் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவை விட நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார். மொத்தத்தில் இன்று நீங்கள் ஆரம்பிப்பதெல்லாம் சிறப்பாக நடக்கும் நாள்.

கடகம்

கடகம்: கடக ராசிகாரர்களாகிய நீங்கள் இன்று புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் பற்றியும் யோசிப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உங்களின் அடுத்த நிலைக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சிம்ம ராசிகாரர்களாகிய உங்களுக்கு வந்த எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அவ்வப்போது தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளியூர் பயணங்களால் உங்களுக்கு அலைச்சல் இருந்தாலும் அதனால் ஆதாயமும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரத்தில் நீங்கள் உங்களுடன் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். விமர்சனங்களையும் தாண்டி வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். இன்று உங்களுக்கு தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: கன்னி ராசிகாரர்களாகிய உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் இன்று அதிக அக்கறை காட்டுவார்கள். அரசு சம்பந்தமான காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் உள்ள பழைய சரக்குகள் எல்லாம் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். இன்று உங்களுக்கு வெற்றி பெறும் நாள்.

துலாம்

துலாம்: துலாம் ராசிகாரர்களாகிய உங்களுக்கு இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்த குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சுற்று வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். உங்கள் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். பொதுவாக இன்று பல மாற்றங்கள் ஏற்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: விருச்சிக ராசிகாரர்களாகிய உங்களின் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் அவ்வப்போது தடை தாமதங்கள் ஏற்படும். உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்களுடன் அவ்வப்போது விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் நீங்கள் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். குறிப்பாக இன்று நீங்கள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: தனுசு ராசிகாரர்களாகிய உங்களுக்கு இன்று அடிக்கடி எதிர்காலம் பற்றி கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவனைத்து பேசுங்கள். அரசு சம்பந்ப்பட்ட விவகாரங்களில் விவாதம் வர வாய்ப்புள்ளது. தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படும். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். இன்று அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மகரம்

மகரம்: மகர ராசிகாரர்களாகிய உங்களுக்கு இன்று எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக நீங்கள் சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். சமூக அக்கறையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்களின் வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு மதிப்பு கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: கும்ப ராசிகாரர்களாகிய நீங்கள் இன்று சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி மிகவும் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள். கடவுள் நம்பிக்கை மற்றும் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். குறிப்பாக இன்று உங்களுக்கு அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மீனம்

மீனம்: மீன ராசிகாரர்களாகிய உங்களுக்கு இதுவரை இருந்த டென்ஷன், கோபம் யாவும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும் நாள். இதுவரை இருந்த பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களுக்கு திருப்தியான சூழல் உருவாகும். இன்று புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்…