சிறுவர்களின் உயிரை காவு வாங்கிய ரசம் சாதம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

0
147
Rasam rice that saved the lives of children! Intensive treatment in the hospital!
Rasam rice that saved the lives of children! Intensive treatment in the hospital!

சிறுவர்களின் உயிரை காவு வாங்கிய ரசம் சாதம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது.இந்த காப்பகத்தை செந்தில்நாதன் என்பவர் நடத்தி வருகின்றார்.அந்த காப்பகத்தில் 20 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள் தங்கியுள்ளனர். நேற்று இரவு அந்த காப்பகத்தில் சிறுவர்களுக்கு ரசம் சாதம் கொடுத்துள்ளனர்.அதனை சாப்பிட்ட சிறுவர்கள் உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.அவர்களுக்கு தொடர்ந்து வாந்தி ,மயக்கம் ஏற்பட்டதால் 14சிறுவர்கள் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் உள்ள 11 சிறுவர்களுக்கு நீர்சத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சிறுவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவர்களின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவர்களின் மரணத்திற்கான காரணம் ஆய்வு முடிவுகள் வந்தால் மட்டுமே தெரியும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து உரிய விவரங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளானர்.

author avatar
Parthipan K