News4 Tamil
News4 Tamil : Neutral News Website in Tamil,India.News4 Tamil Offering Online Tamil News Live,Flash News live in Tamil,Breaking News in Tamil,Headline News in Tamil,Business News in Tamil,Science & Technology News in Tamil,Sports News in Tamil,Latest News in Tamil,Movie News in Tamil,Agriculture News in Tamil, Kollywood Cinema News in Tamil,Tamil Newspaper Updates,Political News in Tamil, Astrology News in Tamil,Daily News Updates in Tamil,Google News in Tamil,Tamil News Today

Ranjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா ரஞ்சித்

0
திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா ரஞ்சித்

ஒவ்வொரு முறையும் தேர்தலை சந்திக்கும்போது தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு சாதி தான் காரணம் என்று தமிழக அரசியல் வாதிகள் கூறியதை நம்பி பெரும்பாலான மக்களும் அவர்களை வெற்றி பெற வைத்தனர் ஆனால் இன்னும் எந்த பிரச்சனைகளும் தீர்ந்ததாக தெரியவில்லை.நாளுக்கு நாள் புதிய பிரச்சனைகளும் தொடர்ந்து உருவாகி கொண்டிருக்கின்றன.தமிழக பிரச்சனைகளுக்கு காரணம் சாதியா அல்லது தமிழக அரசியல்வாதிகளா என்று மக்கள் சிந்திக்க வேண்டிய இந்நிலையில் திரைத்துறையிலும் சாதிய பாகுபாடு என்ற புதிய பிரச்சனையை கிளப்புகிறார் பா.ரஞ்சித்.

உண்மையில் நடந்தது என்ன என்று பார்த்தால் பா.ரஞ்சித் இயக்கிய அனைத்து படங்களிலும் தொடர்ந்து தன்னுடைய சமூகம் சார்ந்த கருத்துக்களை திணித்து வருகிறார்.அவர் இயக்கிய மெட்ராஸ் முதல் காலா வரை என அனைத்து படங்களிலும் அதற்கான அடையாளங்களை பார்க்கலாம்.பெரும்பாலான இடங்களில் தமிழக மக்கள் அனைவரும் எந்த ஒரு பாகுபாடுமின்றி சமத்துவமாக பழகி வரும் சூழ்நிலையில் இது போன்ற படங்கள் தேவையா என்று பலர் விமர்சித்தனர்.

இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படமும் அதே கருத்துகளை கொண்டதாக வெளிவந்துள்ளது.இந்த படம் இயக்கப்பட்ட முறையில் பாராட்டுகளையும் அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு விமர்சனங்களும் சரிசமமான முறையில் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இப்படத்திற்கு போதிய அளவு திரையரங்களும், சரியான நேரத்தில் காட்சிகளும் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தை தொடர்ந்து ஒருவாரமாக விடாமல் வெளிப்படுத்தி வருகிறார் பா.ரஞ்சித். இவர் படத்துடன் வெளியான மணிரத்தினம் படத்திற்கு கிடைத்ததில் பத்தில் ஒரு பங்கு கூட தன் படத்துக்கு கிடைக்கவில்லை என்று அவர் ஆதங்கபடுகிறார்.

திரையரங்குகளையும் காட்சிகளையும் அதிகரிக்கும் அவர் முயற்சி தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்க, நேற்று அதிரடியாக திருமாவளவன், சீமான், வேல்முருகன்,சுப.வீரபாண்டியன் தொடங்கி பெரும்பாலான தலித் ஆதரவாள அரசியல்வாதிகள் என சுமார் 50 பேருக்கும் மேற்பட்டோரை பிரிவியூ திரையரங்கில் படம் பார்க்க வைத்தார்.

தலைவர்கள் படம் பார்த்த புகைப்படங்கள், படம் குறித்த அவகர்களது கருத்துக்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவேற்ற ஒரு குழுவை முனைப்புடன் செயல்படுத்தினர் பட தயாரிப்பளாரான பா.ரஞ்சித்

இதன் மூலம் எனக்குப் பின்னால் எவ்வளவு தலைவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். இனியும் தியேட்டர் தராமல் இழுத்தடிக்காதீர்கள் என்று ரஞ்சித் தியேட்டர்காரர்களுக்கு மறைமுக மிரட்டல் விடுப்பதாகவே தெரிகிறது  என்கிறார்கள் ‘பரியேறும் பெருமாள்’ குறித்து பாராமுகமாக இருப்பவர்கள்.

மக்களுக்கு செய்தியை தருவதற்காக எடுக்கப்படும் எந்த ஒரு திரைப்படமும் பெயரையும்,புகழையும் பெற்று தருமே தவிர வணிக ரீதியாக பலனை தராது என்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் உணர்ந்த நிலையில் தயாரிப்பளாரான பா.ரஞ்சித் புரிந்து கொள்ளாமல் போனது நகைச்சுவையாக உள்ளது.

தொடர்ந்து தான் எடுக்கும் படங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாகவும் பெரும்பாலான சமூகங்களுக்கு எதிராகவும் கருத்துக்களை திணித்து வரும் பா.ரஞ்சித் தற்போது இவர் தயாரித்த படத்திலும் அதையே செய்திருக்கிறார்.பட தயாரிப்பு நிறுவன பெயர் முதல் பெரும்பாலான காட்சிகள் வரை நீல நிறம் மேலோங்கியுள்ளது.இவர் போலவே அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் நினைத்திருந்தால் இதற்கு முன் இவர் இயக்கிய படங்களை வெளியிடவே தயங்கியிருப்பார்கள்.இவருடைய எதிர்கால அரசியல் பயணத்திற்காகவும்,தற்கால வணிகதிற்காகவும் இந்த சாதிய பாகுபாட்டை திரைத்துறையில் புகுத்தாமல் இருப்பது தான் இவருடைய எதிர்காலத்திற்கும்,திரைத்துறையின் எதிர்காலத்திற்கும் நல்லது.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.