அமைச்சர்கள் யார் யார்? ஜாதகத்தை கணித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

0
117

புதுச்சேரி முதலமைச்சர் ஜாதகத்தை பார்த்து அதன் அடிப்படையில் அமைச்சர்கள் யார் யார் என்று முடிவு செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர், இதில் பாரதிய ஜனதா கட்சி 6 தொகுதிகளில் வெற்றியடைந்தது. என்ஆர் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி கண்டது. இதில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி மட்டும் புதுச்சேரியின் முதலமைச்சராக கடந்த மே மாதம் ஏழாம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் ஆகியும் கூட இன்னமும் அமைச்சர்கள் யார் யார் என்று அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, அமைச்சரவை பொறுப்பேற்கும் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அவ்வாறு ஏற்பட்ட போட்டியின்போது பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவி எனவும், என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு முதல் அமைச்சர் உட்பட நான்கு அமைச்சர்கள் பதவி என்றும் இரு கட்சியினருக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

என் ஆர் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களான ராஜவேல், லட்சுமி நாராயணன் மற்றும் தேனி ஜெயக்குமார் உள்ளிட்டோர் இருந்தாலும் முதலமைச்சர் ரங்கசாமியை பொருத்தவரையில் கட்சியில் இருக்கின்ற அனைத்து சட்டசபை உறுப்பினர்களின் ஜாதகத்தை ஆராய்ந்த பின்னர் தான் யார் யார் அமைச்சர்கள் என்று முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் புதுச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி அவருடைய கட்சியின் சட்ட சபை உறுப்பினர்களுக்கு ஜோதிடம் பார்த்தாலும் பரவாயில்லை. பாரதிய ஜனதா கட்சியின் சட்ட சபை உறுப்பினர்கள் ஜான்குமார், நமச்சிவாயம், சாய் சரவணன், ஆகிய மூன்று பேரின் ஜாதகத்தை கணித்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் நமச்சிவாயம் மற்றும் சரவணன் ஆகிய இருவரது ஜாதகமும் நன்றாக இருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சிக்கு பரிந்துரை செய்து இருக்கின்றார். இதன் காரணமாக அமைச்சர் பதவிக்கு காத்திருந்த ஜான்குமார் தற்போது விரக்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.