அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராமதாஸ்…! அதிமுக கூட்டணியில் விரிசலா…?

0
52

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்து கொண்டே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர் ஆளும் கட்சியான அதிமுக வில் வெகுநாட்களாக புகைந்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்சனை ஒருவழியாக ஒரு நல்ல முடிவிற்கு வந்துவிட்டது எனவே இனி வரும் காலங்களில், எதிர்வரும் தேர்தலுக்கான பணிகளில் அதிமுக இறங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது, சமீபகாலமாக விநாயகர் சிலை போன்ற விவகாரங்களில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருவதாக பரவலாக பேசப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய வலைப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி சொல்வதெல்லாம் செய்கின்றார் சொல்லாததையும் செய்கின்றார் ஆனாலும் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் தமிழக மக்களின் பேச மறுக்கிறார்கள். அவர்களின் குறைகளை செய்து தரவும் முன்வருவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். ஆளும் கட்சியுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராமதாஸின் இந்த கருத்து பாமக மற்றும் அதிமுக கூட்டணியில் சிக்கல் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது அதுபோல பாமக மற்றும் திமுக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் அரசுக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருக்கின்றார். ஆனாலும் எங்கள் கூட்டணியில் எந்த ஒரு கூச்சலோ அல்லது குழப்பமோ, இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார்.