எல்லையில் நடக்கும் அத்துமீறலுக்கு தக்க பதிலடி தர தயார்-விமானப்படை தளபதி அறிவிப்பு

0
62
Rakesh Kumar Singh Bhadauria
Rakesh Kumar Singh Bhadauria

கடந்த 15 ஆம் தேதி இந்திய எல்லைப் பகுதியான லடாக்கின் கிழக்கே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலால் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.மேலும் எல்லையில் இது போல இனி எந்த தாக்குதலும் நடக்காமல் இருக்கும் வகையில் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சீனாவுடனான எல்லைப் பகுதியை தொடர்ந்து கவனிக்க இந்திய விமான படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் இந்திய விமான படையின் தளபதி பதாரியா லடாக் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.அப்போது விமானப் படையின் மூத்த அதிகாரிகள் பலருடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பின்னர் ஹைதராபாத் விமானப்படை அகாதமியில் நடந்த ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்,எல்லைபகுதியில் அமைதியை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளபடுகிறது. ஆனால் எல்லையில் நடைபெறும் எந்த ஒரு அத்துமீறலுக்கும் தக்க பதிலடி தர தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வான் பள்ளதாக்கில் வீரமரணமடைந்த வீரர்களின் தியாகத்தை வீணாக விட மாட்டோம்,எல்லையில் பாதுகாப்பு படைகள் தீவிர கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.