வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்ட வித்தியாச நெருக்கடி!!….

0
172

  • வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் ஓபிஎஸ் இபிஎஸ்க்கு ஏற்பட்ட வித்தியாச நெருக்கடி!!….

மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் இரு வெவ்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சிக்கி தவிக்கின்றனர்.

இருவேறு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இரட்டை தலைமை இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிடுவார்கள். அதன்பின் மீண்டும் கழகத்துக்குள் அதிருப்தி அலைகள் உருவாகலாம் என ஆருடம் கூறுகின்றனர்.

அதிமுக வட்டாரங்களில்,சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டால் ஆறு ஆண்டு காலத்துக்கு ‘மாண்புமிகு’வாக வலம் வரலாம் என கணக்கு போட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

இரட்டை தலைமை என்பதால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஆளுக்கு ஒரு சீட்டை எடுத்துக்கொண்டு தங்களது ஆதரவாளர்களுக்கு கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.ஆனாலும் இந்த நிலை முடிவுக்கு வரவில்லை ,
இந்த ஒரு சீட்டை யாருக்கு கொடுப்பது என்று தெரியாமல் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இருவருக்கும் இரு விதமான நெருக்கடி ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியிடம் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா இன்னும் சிலர் வாய்ப்பு கேட்கின்றனர்.இருப்பது ஒரு சீட் தான் என்பதால் ஒருவருக்கு கொடுத்துவிட்டு பலரது அதிருப்தியை எடப்பாடி பழனிசாமியும் சந்திக்க வேண்டியிருக்கும்.

தொண்டர்கள், நிர்வாகிகள் ஆதரவை பெருமளவு எடப்பாடி பழனிசாமியே கைப்பற்றியுள்ளார். கடந்த அமைச்சரவையும் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பின்னாலேயே அணி வகுத்து நின்றது. எனவே அவரது கோட்டாவில் இடம் கேட்டு பலர் அழுத்தம் கொடுக்கின்றனர்.

அடுத்ததாக ஓபிஎஸ் பன்னீர் செல்வத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி,
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் தனது பக்கம் நிர்வாகிகளை தக்கவைப்பதில் பன்னீர் செல்வம் பின் தங்கிப் போய்விட்டார்.
தெற்குப்பகுதியில் மட்டுமல்லாமல் தனது மாவட்டங்களிலும் பெரிய ஆதரவு அவருக்கு இல்லை என்பது தான் தற்போதைய நிலை.

இதனால் அவரது கோட்டாவில் வாய்ப்பு கேட்பவர்களுக்கு அதை கொடுக்க ஓபிஎஸ்ஸே தயங்குகிறார்.நம் பக்கம் நிற்பார்களா, முகாம் மாறிவிடுவார்களா என்ற பயம் அவருக்கு தோன்றிவிட்டது.

ஜெயலலிதா இருந்தவரை எந்த தேர்தலை எதிர்கொண்டாலும் முந்திக் கொண்டு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு எதிர்கட்சியினரையும் சமயத்தில் கூட்டணிக் கட்சியினரையும் திக்குமுக்காட வைப்பார்.

கூட்டணியில் இருந்த பாமகவும், பாஜகவும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. ஆனால் இரண்டு வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் தற்போதைய அதிமுக தலைமை விழிபிதுங்கி நிற்கிறது.

author avatar
Parthipan K