ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய விசாரணை அதிகாரி காலமானார்!

0
70

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கரையோரத்தில் விசாரணை அதிகாரியாக இருந்தவர்களில்  முக்கியமானவராக கருதப்பட்டவர் ரகோத்தமன் இவருடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர் சென்னையில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் வசித்து வருகிறார்.

இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து விசாரணை செய்து வந்த காரணத்தால், ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற புத்தகத்தை எழுதி அதை வெளியிட்டு இருந்தார். இந்த புத்தகம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய சர்ச்சையாக கிளம்பியதாக சொல்கிறார்கள்.

சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் நோய்த்தொற்று பாதிப்பிற்கு ஆளானார். அதன் காரணமாக அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது . இப்படியான சூழலில் தற்போது அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவர் சிபிஐயில் சுமார் 36 ஆண்டுகள் பணியாற்றியதாக சொல்கிறார்கள் இவர் கையாண்ட அத்துணை இவ்வழக்குகளையும் மிக திறமையாக செயல்பட்டு முடித்து வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.அதோடு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இவருடைய பங்கு மிக முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பேரறிவாளன் உள்ளிட்ட பல முக்கிய குற்றவாளிகளை கண்டறிந்ததில் இவருடைய விசாரணை மிக முக்கிய பங்கு வகித்ததாக சொல்கிறார்கள்.

இப்படி திறமையான ஒரு விசாரணை அதிகாரி ஓய்வு பெற்று இருந்தாலும் அவருடைய அறிவுரையும், ஆலோசனையும், அந்தத் துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தேவைப்பட்டது என்று சொல்கிறார்கள்.ஆகவே அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இந்திய புலனாய்வுத் துறைக்கு அவருடைய இழப்பு மாபெரும் இழப்பாகவே  கருதப்படுகிறது என்று சொல்லுகிறார்கள்.