ஜெயிலர் படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் லீக்!!

0
119
#image_title

ஜெயிலர் படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் லீக்!!

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப தனது அசாத்திய ஸ்டைல் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தவர் சிவாஜிராவ் என்ற ரஜினிகாந்த், அவரது ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை எத்தனையோ பல அவமானங்களை சந்தித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என ஆசைப்படாத இயக்குனர்களே கிடையாது, இவர் நடித்த திரைப்படங்களில் ஒரு சில படங்களை தவிர்த்து அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் தான், அந்த வரிசையில் தற்போது இளம் இயக்குனர் டாக்டர்,பீஸ்ட், கோலமாவு கோகிலா போன்ற வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் தற்போது ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

இயக்குனர் நெல்சன் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் அதை பற்றி சிந்திக்காமல் நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினிகாந்த், இந்த திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட போது பல்வேறு விமர்சனம் எழுந்த நிலையில் போக போக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிறைய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன, இதுவரை தாடியுடன் நடித்து வந்த ரஜினிகாந்த் தற்போது புதிய தோற்றத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த ஜெயிலர் படத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆகிய மொழி உள்ள உச்ச நடிகர்களை இந்த படத்தில் இயக்குனர் நெல்சன் நடிக்க வைத்துள்ளார், மேலும் இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருவது அவரது ரசிகர்களை குஷி அடைய வைத்துள்ளது.

இந்திய திரையுலகின் முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்துள்ளதால் படத்திற்க்கான விறுவிறுப்பை எகிற செய்துள்ளது, தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது, இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் புதிய தோற்றத்தில் கலந்து கொண்டுள்ளார், விரைவில் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நிறைவு பெற்று வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.