சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்… பின்னணி என்ன?

0
115

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்… பின்னணி என்ன?

நடிகர் ரஜினிகாந்த் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபற்றிய சமீபத்தைய தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐதராபாத்தில் செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தெலுங்கு சினிமாவில் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்தபடி படப்பிடிப்பு தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் எதிர்பார்த்தபடி ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஷூட்டிங் தொடங்காது என தகவல்கள் வெளியாகின. ஏனெனில் படப்பிடிப்பு நடக்க இருந்த ஐதராபாத்தில் சினிமா ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு மேலும் தாமதம் ஆகலாம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் டெல்லியில் நடக்க இருக்கும் ஜெயிலர் படத்துக்கான படப்பிடிப்புக்காகதான் சென்றுள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். பல முறை திரைக்கதை விவாதங்கள் பல முன்னணி இயக்குனர்களோடு நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.