ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்… இணையத்தில் லீக்கான புகைப்படம்!

0
86

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்… இணையத்தில் லீக்கான புகைப்படம்!

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை.

இதையடுத்து தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் கணிசமாகக் குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் தொடர்ங்கியது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிரண் கலை இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் விநாயகன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் படத்தின் படப்பிடிப்பு பிரபலமான ஒரு பகுதியில் நடந்து வருகிறது. ஒரு காலத்தில் சென்னையில் சினிமாக்காரர்களுக்கு பிடித்தமான இடமாக இருந்த உட்லேண்ட்ஸ் ஹோட்டல் இருந்த இடத்தில் ஒரு காவல்நிலைய செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அங்கு ரஜினி மற்றும் யோகி பாபு சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் நெல்சன் படமாக்கி வருகிறாராம். இந்நிலையில் செட்டில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இருட்டில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.