சிஏஏ, என்.ஆர்.சி. குறித்து ரஜினிகாந்த் கருத்து: பொங்கியெழ தயாராகும் அரசியல்வாதிகள்

0
88

இந்தியாவில் சிஐஏ சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்த பிரச்சனை குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் கருத்துக் கூறி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் ரஜினிகாந்த் இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். இதனை அடுத்து முதன்முதலாக இது குறித்து தனது கருத்தை செய்தியாளர்களிடம் இன்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றும் அரசியல் கட்சிகள் தங்களுடைய சுய லாபத்திற்காக இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள் என்றும் எனவே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்த சட்டம் குறித்து எந்தவித அச்சுறுத்தலும் பெற வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். ஒருவேளை இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் நானே குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் என்ஆர்சி என்பது மிகவும் அவசியமான ஒன்று என்றும் இது குறித்து அரசியல் கட்சிகள் புரிதல் இல்லாமல் பேசிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தனது கருத்து என்று கூறிய ரஜினிகாந்த் வருமானவரி விஷயத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் சட்டப்படிதான் நடந்து உள்ளதாகவும் தெரிவித்தார்

மேலும் மாணவர்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் முன்பாக நன்றாக யோசித்து ஆசிரியர்கள் உள்பட பெரியவர்களிடம் கேட்டு அறிந்து அதன் பின் போராட வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் அவர்களை பயன்படுத்தும் நிலைக்கு நிலையை ஏற்படுத்த கூடாது என்றும் தவறான போராட்டத்தால் போலீஸ் நடவடிக்கையால் அவருடைய வாழ்க்கையே திசை மாற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்

சிஐஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து ரஜினிகாந்த ஆதரவு தெரிவித்ததை அடுத்து அவருக்கு எதிராக விமர்சனம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் தயாராகி வருகின்றனர் என்பதும் இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த பேட்டி அவர்களுக்கு தீனியாக இருக்கும் என்று கூறப்படுகிறது

author avatar
CineDesk