ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது அவரது மகளா?  பரவும் தகவல்!

0
128

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது அவரது மகளா?  பரவும் தகவல்!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் வெளியான தர்பார் திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் கணிசமாகக் குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்து டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கிடையில் ரஜினி தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிரது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் 3 மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆனால் இந்த படங்களுமே வெற்றிப் படமாக அமையவில்லை. இந்நிலையில் இப்போது மூன்றாவதாக படத்தை இயக்க ஆயத்தமாகி வருவதாக சொல்லப்படுகிறது.