நாடகமாடும் ரஜினிகாந்த்? கமல்ஹாசன் அளித்த ருசிகர பதில்!

0
78

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில் கொடுத்து இருக்கின்றார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தன்னுடைய மூன்றாம் கட்ட பிரசாரத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக வாக்குறுதிகளை அளித்து வரும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இன்றைய தினம் மக்கள் நீதி மையத்தின் மகளிர் அணியினருடன் செய்திருக்கின்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் என்பது தமிழக அரசியலில் தலைவிரித்து ஆடுகின்றது. பிறந்த குழந்தைக்கு பெண் குழந்தையாக இருந்தால் 300 ரூபாயும், ஆண் குழந்தையாக இருந்தால் 500 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது. பிறப்பு சான்றிதழ் அதற்கு 200 ரூபாய் வாங்க படுகின்றது. ஆண் இருந்தால் 500 ரூபாய் வாங்க படுகின்றது. இன்று லஞ்ச விலைப்பட்டியலை வாசிக்கத் தொடங்கினார் கமல்ஹாசன்.

அனைத்து வீடுகளுக்கும் இணையதள வசதி வசதிகளுடன் கூடிய கணினி அளிக்கப்படும் எனவும் அனைத்து மாவட்டமும் ஒவ்வொரு தலைநகர் ஆக்கப்படும் அந்தந்த தொழில் சார்ந்த, துறை சார்ந்த, மாவட்டங்களை தலைநகராக்க இயலும் எனவும் தெரிவித்த கமல்ஹாசன் ,மக்கள் நீதி மையம் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்படும் அவ்வாறு அமைந்தால் முதல்வர் வேட்பாளராக நானே இருப்பேன் மக்கள் நீதி மையம் திராவிட கட்சி தான் இங்கே தமிழ் பேசும் அனைவருமே திராவிடர்கள் தான். விவசாயத்தை மதிக்காத நாடு வீழ்ச்சியடையும் அது நம்முடைய நாட்டிற்கு நடக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக நாடகமாடுகிறாரா என்ற கேள்விக்கு 40 வருட கால நண்பர் ரஜினிகாந்த் உடல்நிலை ஆரோக்கியம் தான் முக்கியம். அதன் பிறகு தான் அனைத்தும் சரியாகும் என்று பதிலளித்தார் கமல்ஹாசன்.