ஆடிட்டர் குருமூர்த்தி பக்கா ப்ளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
82

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கின்ற நிலையில், அதற்கு முன்பாக அழகிரி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும், ரஜினி தன்னுடைய அரசியல் கட்சியையும் அறிவிக்க இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், அடுத்த ஆட்சி அமைக்கப்போவது தாங்கள் தான் என்ற முடிவில் திமுக உறுதியாக இருக்கின்றது.அதே நேரம் திமுக இன்னொரு முறை ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ஒரு தரப்பு மிகவும் உறுதியாக இருக்கின்றது. ஆட்சிக்கு வருவதற்கு திமுக எவ்வாறு வியூகம் அமைத்து வருகின்றதோ அதேபோல திமுகவை தோற்கடிப்பதற்கு என இன்னொரு தரப்பு வேலை பார்த்து வருகின்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் களத்தில் மிக முக்கியமான பங்கை வகித்து வருகின்றார். இவருடைய ஆர்வம்தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு இழுத்து வந்தது என்று தெரிவிக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி ,உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் என்று ஆண்டு கொண்டிருக்கும் பாஜகவின் முக்கிய பிரமுகர்களை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் உரிமை ஆடிட்டர் குருமூர்த்திக்கு இருக்கின்றது. இவருடைய முக்கிய நோக்கமே திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பது தான். ரஜினியின் தலைமையில் உருவாக உள்ள கூட்டணியில் அதிமுக இணைக்க வேண்டும் என இவர் வேலை செய்து வருகின்றார். இது குறித்து சில உறுதிமொழிகள் கிடைத்ததை அடுத்து ரஜினி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நாட்டில் இப்போதைய சூழ்நிலையில், திமுக, அதிமுக, இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகின்றது. யார் வாக்காளர்களைக் கவர்ந்து இருக்கிறார்களோ அவர்கள் தான் தேர்தலில் வெற்றி பெற இயலும். ஆதிகாலத்திலிருந்து அதிமுக, மற்றும் திமுக விற்கு வாக்களிப்பவர்கள் சாய்ஸ் என்றாகிவிட்டது. இவர்களை தவிர்த்து தமிழகத்தில் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் என்று ஒரு பிரிவினர் இருந்து வருகிறார்கள். இவர்கள் எப்போதுமே ஆளும் தரப்பை புறக்கணித்து விட்டு எதிர்கட்சிக்குதான் வாக்களிப்பார்கள். இவர்களைத்தான் ரஜினி கவர்ந்து வருகிறார் என்பது ஆடிட்டர் குருமூர்த்தியின் கணிப்பு.

எதிர்க்கட்சிக்கு போகவேண்டிய ஓட்டுக்களை கவர்ந்து விட்டால், எளிதாக அதிமுக வெற்றி அடைந்து விடும் திமுகவை ஆட்சிக்கு வர இயலாமல் தடுத்துவிடலாம். அப்படி தவிர்த்துவிட்டால், பாஜகவை இங்கே அடுத்த ஐந்து வருடங்களில் கால் பதிக்க வைத்துவிடலாம். ஆகவேதான் ரஜினி அரசியல் களத்துக்கு கொண்டு வரப்பட்டது.இதேபோல கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அழகிரி அரசியல் களத்தில் இருந்து ஓரம்கட்டபட்டிருக்கிறார் இதற்கு காரணம் தன்னுடைய சகோதரர் ஸ்டாலின் என அவர் நம்பிக் கொண்டு இருக்கின்றார்.

ஆகவே எப்படியாவது ஸ்டாலினை பழிதீர்த்துவிட வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருக்கின்றார். அழகிரி அதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கின்றார் . தென்மாவட்டங்களில் திமுகவின் வீழ்ச்சி என்ன அதனுடைய மைனஸ் பாயிண்ட் என்ன என்பது அவருக்கு பிங்கர் டிப்ஸ் என்று சொல்கிறார்கள். ஆகவே தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு எதிரான வேலைகளில் அழகிரியால் சுலபமாக ஈடுபட இயலும் என்று தெரிவிக்கிறார்கள்.

இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் அழகிரியை பாஜகவில் இணைப்பதற்கு அந்த கட்சி முயற்சி செய்தது. ஆனாலும் எனக்கு இப்போது அரசியல் ஆசை இல்லை என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார் அழகிரி. தன்னுடைய ஒரே நோக்கம் என்பது ஸ்டாலினை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் என்றும் அழகிரி தெரிவித்துள்ளார். பாஜக தரப்பில் இருந்து தன்னிடம் பேசிய அவர்களிடம் அவருடைய நோக்கத்தை தெரிவித்துவிட்டார் அழகிரி.

அதோடு எதிர்வரும் 31ஆம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் நாளை அறிவித்து இருக்கிறார் ரஜினி. அவருடைய நோக்கமும் திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதால் அதேபோல அழகிரி விநியோகமும் ஸ்டாலினை ஆட்சியில் அமர விடக்கூடாது என்பது தான் ஆகவே எதிர்வரும் 31ஆம் தேதி மற்றும் மூன்றாம் பருவம் ஆகிய தினங்கள் தமிழக அரசியல் களத்தில் திமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.