வா தலைவா வா! நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்!

0
69

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சென்ற டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்ததற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தார்கள்.

தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி அரசியல் இருக்கு வர முடியாது என்று அறிவித்திருந்தார் ரஜினிகாந்த். இந்த முடிவை அறிவிக்கும் போது தனக்கு ஏற்பட்ட வலி என்ன என்பது தனக்கு மட்டுமே தெரியும் எனவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினியின் இந்த அரசியல் நிலைப்பாட்டை பலரும் வரவேற்றாலும் கூட, அவர் அரசியலுக்கு வருவார் என 30 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்த ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், பாஜகவினருக்கும் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது இந்த அறிவிப்பு.

இந்தநிலையில், ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பிற்கு தமிழ்நாட்டில் ஆங்காங்கே ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக, அரசியல் தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்றையதினம் காலை குகை ஐயப்பன் தலைமையிலே ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடினார்கள். அதன்பின்னர் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து தங்களுடைய கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் பங்கேற்ற ரஜினி ரசிகர்கள் தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் அரசியல் மாற்றம் உருவாக்க வா தலைவா வா என கோஷங்கள் எழுப்பி இருக்கிறார்கள்.

இப் போராட்டம் தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, தமிழ் நாட்டில் நல்லாட்சி அமைக்க ரஜினியால் மட்டுமே முடியும் என்று நினைத்திருந்தோம். ஆனாலும் இப்பொழுது தலைவர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது குறித்து ஏமாற்றம் அடைந்து இருக்கின்றோம். ஆகவே அவருடைய அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து, ரசிகர்களான நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என்று தெரிவிக்கிறார்கள்.

ரஜினியின் மக்கள் மன்றத்தினரின் இந்த போராட்டம் ஆனது தொடர்பான தகவல் ரஜினிகாந்த் அவர்களுக்கும் போய்க் கொண்டுதான் இருக்கின்றன. அவர் விரைவாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கின்றார் என்று மக்கள் மன்ற மேல்மட்ட நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.