நடந்து முடிந்த ரஜினியின் அடுத்த படத்தின் டெஸ்ட் ஷூட்… வெளியான பிரத்யேக தகவல்!

0
56

நடந்து முடிந்த ரஜினியின் அடுத்த படத்தின் டெஸ்ட் ஷூட்… வெளியான பிரத்யேக தகவல்!

ரஜினிகாந்த் அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த அண்ணாத்த திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

பீஸ்ட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் நெல்சன். ஆனால் பீஸ்ட் வெளியான பின்னர் அந்த படம் தோல்விப் படமாக அமைந்ததால் கடும் விமர்சனங்கள் நெல்சன் மேல் எழுந்தன. சமூகவலைதளங்களில் பல ட்ரோல்களும் உருவாகின. ஆனாலும் ஜெயிலர் படத்துக்கு இயக்குனர் நெல்சன்தான் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் ஐதராபாத்தில் தொடங்கும் சொல்லப்படுகிறது.  இதற்கிடையில் படத்தின் டெஸ்ட் ஷூட் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐதராபாத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலவரையின்றி வேலை நிறுத்தம் நடக்க உள்ள நிலையில் எதிர்பார்த்தபடி ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தொடங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.