Connect with us

Breaking News

ரஜினி எப்போதுமே மாஸ்தான்!! விக்ரம், லியோவை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்!!

Published

on

Rajini is always Mastan!! Vikram, the jailer who pushed Leo back!!

ரஜினி எப்போதுமே மாஸ்தான்!! விக்ரம், லியோவை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய வீடியோ வெளியானது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருப்பதால் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் ரிலீசுக்கு முன்பாகவே வெளிமாநிலங்களில் வியாபாரம் ஆகும். அந்த வகையில் எப்போதுமே விஜய் படத்திற்குதான் ப்ரி பிசினஸ் தான் நன்றாக வியாபாரம் ஆகும்.  அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் 200 கோடிக்கும், தற்போது இயக்கும் லியோ படத்தின் ப்ரி பிஸினசும் 200 கோடிக்கு நடத்துள்ளது.

இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளிநாட்டு வியாபாரம், ஆடியோ மற்றும் ஓடிடி போன்றவற்றை சேர்த்து 400 கோடி ரூபாய்க்கு  வியாபாரம் ஆகியுள்ளது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இந்தளவுக்கு வியாபாரம் ஆனதில்லை. மேலும் இந்த படத்தில் மோகன்லால் நடித்துள்ளதால், கேரளாவில் 7 கோடி வரை வியாபாரம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement

 படம் இன்னும் வெளியாகாத நிலையில் இந்தளவுக்கு வியாபாரம் ஆனது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. ரஜினிக்கும் அண்ணாத்தே திரைப்படம் சரியாக போகவில்லை, நெல்சனுக்கும் பீஸ்ட் படம் தோல்வியை தழுவியது. அதனால் சூப்பர்ஸ்டார் மற்றும் நெல்சன் இருவருக்கும் இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Advertisement