மக்களவை தேர்தலில் மரண அடி வாங்கிய பாமகவிலிருந்து விலகிய முன்னாள் நிர்வாகி ராஜேஸ்வரி பிரியா

0
140
Rajeshwari Priya Gets Lowest Votes in Loksabha Election 2019- News4 Tamil Online Tamil News Channel
Rajeshwari Priya Gets Lowest Votes in Loksabha Election 2019- News4 Tamil Online Tamil News Channel

மக்களவை தேர்தலில் மரண அடி வாங்கிய பாமகவிலிருந்து விலகிய முன்னாள் நிர்வாகி ராஜேஸ்வரி பிரியா

தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதற்காக பாமகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தவர் தான் ராஜேஸ்வரி பிரியா. இவர் வன்னியரல்லாத மாற்று சமுதாயத்திலிருந்து பாமகவில் இணைந்திருந்தாலும் பாமக தலைமை ஆரம்பத்திலியே அவருக்கு மாநில துணைத்தலைவர் பதவியை வழங்கியது. இது பாமகவின் சமூகநீதி பெயரளவில் மட்டும் இல்லை செயல்பாட்டிலும் உள்ளது என்பதை உறுதி செய்தது. அதே போல பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களும் குறுகிய காலத்தில் நல்ல ஆதரவை வழங்கினார்கள்.

கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே இவருக்கு முக்கியமான மேடைகளில் பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரது பேச்சு திறமையாலும் பாமக தொண்டர்களின் தொடர் ஆதரவாலும் அக்கட்சியில் அடையாளம் காணும் பேச்சாளர்களில் ஒருவராகவும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவராகவும் விளங்கினார் ராஜேஸ்வரி பிரியா. அதற்கு காரணம் பாமக தலைமை புதியவராக இருந்தாலும் நம்பிக்கை வைத்து அவருக்கு தொடர்ந்து மேடையிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசும் வாய்ப்பினை அளித்தது. இது மட்டுமல்லாமல் பாமகவின் தொண்டர்களும் ராஜேஸ்வரி பிரியாவிற்கு சிறந்த ஆதரவை வழங்கி வந்தார்கள்.

மேலும் படிக்க: பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசு

இந்நிலையில் தான் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்காக பாமக அதிமுகவுடன் கூட்டணி உடன்பாடு வைத்தது. கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த பாமக திடீரென்று அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பிடிக்காமல் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி பாமகவிலிருந்து வெளியேறினார். வெளியேறியதோடு மட்டுமல்லாமல் இல்லாமல் பாமக குறித்து சம்பந்தமில்லாமல்  பல்வேறு விமர்சனங்களையும் பொது வெளியில் வைத்தார்.

இதனால் வெறுப்படைந்த பாமக தொண்டர்கள் எந்த அளவிற்கு அவரை நம்பி ஆதரவளித்தார்களோ அதே அளவிற்கு அவரை கடுமையாக விமர்ச்சித்து வந்தனர். அந்த நேரத்தில் அவர் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நடிகர் கமலஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் என இரண்டு கட்சிகளில் இணைவதாக வதந்தி பரவியது.

இதே போல நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் அவர்களது கட்சியில் இணைய சமூக ஊடகங்கள் வழியாக அழைப்பு விடுத்தனர். ஆனால் விளம்பர பிரியரான இவர் முகநூல் பக்கத்தில் உள்ள பின்தொடர்பாளர்களை பார்த்து மக்கள் ஆதரவு தனக்கு அதிகமாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டார். இதனால் ராஜேஸ்வரி பிரியா நடைபெற்ற மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும் படிக்க : ஸ்டாலினை ஆட்சியை பிடிக்க விடாமல் மீண்டும் விரட்டியடித்த பாமக.

மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த ராஜேஸ்வரி பிரியா அதற்கு அவர் தேர்ந்தெடுத்த தொகுதி தென் சென்னை. திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அதிமுக சார்பாக ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் போன்றோர் போட்டியிடும் தென் சென்னை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ராஜேஸ்வரி ஓரளவு அதிக வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 772 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார்.

Rajeshwari Priya Gets Lowest Votes in Loksabha Election 2019 News4 Tamil Online Tamil News Channel
Rajeshwari Priya Gets Lowest Votes in Loksabha Election 2019 News4 Tamil Online Tamil News Channel

அரசியலில் புதியவரான ராஜேஸ்வரி பிரியா இணைந்த உடனே பாமகவில் தனக்கு கிடைத்த பதவியை பயன்படுத்தி முன்னேற முயற்சிக்காமல் தமிழக மற்றும் தேசிய அரசியலின் சூழ்நிலையை அறியாமல் அவசரமாக வெளியேறியது அவருக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தை கொடுத்துள்ளது. தேர்தல் முடிவு வெளியான பிறகு தற்போது தேவையில்லாமல் பாமகவில் இருந்து வெளியேறிவிட்டோமோ என்றும் புலம்பி வருகிறாராம் ராஜேஸ்வரி பிரியா.

அரசியலில் ஆசை யாரை விட்டது. காலம்காலமாக கட்சி நடத்தி வருபவர்களே ஆட்சியை பிடிக்க திணறி வரும் சூழலில் இவரின் முயற்சி பாராட்ட கூடியது என்றாலும் எந்த ஒரு அடிப்படை கட்டமைப்பும் இல்லாமல் தேர்தலில் நின்றது இவருக்கு மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளது.

மேலும் படிக்க : தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

author avatar
Parthipan K