இதனால்தான் அவர் வீதிகளில் உலா வருகிறார்! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ருசிகர தகவல்!

0
63

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், வராவிட்டாலும் ஏற்றுக்கொள்வோம், என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் நாட்டை மீட்க போகிறேன், இந்திய நாட்டை மீட்க்க போகிறேன், என கூறியவர்கள் வேலை அற்றவர்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தமிழ்நாடும் மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியாவும் மிகப் பாதுகாப்பாக இருக்கின்றது. என்று தெரிவித்திருக்கின்றார்.

எங்களுடைய கூட்டணி மிக வலுவான கூட்டணி எனவும், அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சியை பிடிக்கும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் முதல்வராக அமர்வார் எனவும், தெரிவித்திருக்கின்றார்.

மருத்துவக் கல்லூரியில், ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று எங்கே ஸ்டாலின் போராடினார்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.

இந்த விஷயத்தில், தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது அவருடைய அறியாமை என்று தான் சொல்ல வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே, வீதியில் உலா வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

ஆனால் கண்ணாடியை அணிந்து கொண்டு, ஏசி ரூமில் அமர்ந்து அரசியல் செய்பவர் அல்ல எடப்பாடியார் என்றும் தெரிவித்திருக்கின்றார் ராஜேந்திர பாலாஜி.

திரு. ரஜினிகாந்த் அவர்கள் வெளிப்படையாக பேசி இருக்கின்றார். அவர் 70 வயதை கடந்த பின்பும் கதாநாயகனாக நடிக்கும் திறமை வாய்ந்தவர், இன்றைய இன்றைய இளம் நடிகைகள் அவருடன் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள், என்று தெரிவித்திருக்கின்றார்.

கட்சியை தொடங்கி தமிழகம் முழுவதுமாக அவர் சுற்றிவர இயலுமா ,அவருடைய உடல்நிலை ஒத்துழைக்குமா என அவருடைய நண்பர்கள் பயப்படுகிறார்கள். அதனுடைய வெளிப்பாடுதான் இன்று அறிக்கையாக வந்திருக்கின்றது.

ஆனால், ரஜினி பயந்து போய் இருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ரஜினியின் எண்ணம் நல்ல எண்ணம் ரஜினி அரசியலுக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ளவோம், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், நல்லாட்சி கொடுப்பவர்களை நிச்சயம் அவர் ஆதரிப்பார். தமிழகத்தில் அவர் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.