திருமாவளவனின் சந்தர்ப்பவாத அரசியல்: ராஜபக்சே மகன் நமல் அறிக்கை

0
78

திருமாவளவனின் சந்தர்ப்பவாத அரசியல்: ராஜபக்சே மகன் நமல் அறிக்கை

தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச கூறியுள்ளார். மேலும் புதிய அதிபரை விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பதுதான் சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘தமிழகத்தில்‌ தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில்‌ தமிழ்‌ மக்களைப்பற்றி அக்கறையுள்ளவர்களாகக்‌ காட்டி முதலைக்‌ கண்ணீர்‌வடிக்கும்‌ மதிமுக-வின்‌ பொதுச்‌ செயலாளர்‌ வைகோ, விடுதலை சிறுத்தைகள்‌ கட்சியின்‌ தலைவர்‌ தொல்‌ திருமாவளவன்‌, தமிழர்‌ தேசிய முன்னனி தலைவர்‌ பழ.நெடுமாறன்‌ ஆகியோரின்‌ அறிக்கைகளை கண்ணுற்றேன்‌. அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத்‌ தவிர அவற்றில்‌ வேறேதும்‌ இல்லை. எமது மக்களை பகடைக்காய்களாக்கும்‌, எம்மக்களிடையே பகையையும்‌ துவேசத்தையும்‌ தூண்டிவிடும்‌ மூன்றாந்தர அரசியலைத்‌ தவிர வேறு என்ன ஆக்கபூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள்‌ என்ற கேள்வி என்னுள்‌ எழுவதை என்னால்‌ தடுக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

2009ல்‌ யுத்தம்‌ நிறைவடைந்த காலத்தில்‌ மறைந்த தமிழகத்தின்‌ முதலமைச்சர்‌ மரியாதைக்குரிய கலைஞர்‌ கருணாநிதியின்‌ கட்சியான திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பிலான பாராளுமன்றக்‌ குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு. வடக்கு – கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன்‌ முன்னாள்‌ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன்‌ சிநேக பூர்வமான சந்திப்பிலும்‌ ஈடுபட்டிருந்தமை உலகம்‌ அறிந்த விடயம்‌. அதில்‌ விடுதலை சிறுத்தைகள்‌ கட்சியின்‌ தலைவரும்‌ கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமான தொல்‌ திருமாவளவன்‌ அவர்கள்‌ கலந்து கொண்டதுடன்‌, எம்முடன்‌ சிநேகபூர்வ கலந்துரையாடலில்‌ ஈடூபட்டதுடன்‌. எமது நிலைப்பாடுகளையும்‌ தெளிவுற அறிந்து கொண்டிருந்தார்‌. அத்தகையவர்‌ இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது.

author avatar
CineDesk