Breaking News

ரயில்வே ஊழியர்களின் காட்டில் பணமழை தான்! மத்திய அரசு வழங்கும் அடுத்தடுத்து குட் நியூஸ்!

Published

on

ரயில்வே ஊழியர்களின் காட்டில் பணமழை தான்! மத்திய அரசு வழங்கும் அடுத்தடுத்து குட் நியூஸ்!

ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்.இந்திய ரயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல 13,169 ரயில்கள் இயக்கப்படுகின்றது.அதனையடுத்து சரக்குகளை ஏற்றி செல்ல 8,479 சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றது.

Advertisement

இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இந்த ரயில்களை அனைத்தையும் பாரமரிக்க 17 மண்டலங்கள் மற்றும் 68 படைபிரிவுகள் உள்ளது.அதனை கண்காணிக்க சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

அதனையடுத்து ஊழியர்கள் 67,956 கிலோ மீட்டர் தூரம் இருப்பு பாதைகளில் பாராமரிப்பு மற்றும் சேவை பணிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் இவ்வாறான பணிகளை செய்யும் ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கக கோரிக்கை விடுத்திருந்தனர்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளும் கொரொனோ பரவல் காரணமாக ஊழியர்களின் கோரிக்கைக்கு முடிவு ஒன்றும் எடுக்கப்படவில்லை.

Advertisement

நடப்பாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மத்திய அரசு தற்போது அந்த கோரிக்கைக்கு தகுந்த முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.அதில் ரயில்வே துறையின் ஊழியர்கள் வைத்த கோரிக்கைகள் பரிசீலினை செய்யப்பட்டது.அந்த வகையில் 7,8,9 ஆகிய நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவரவர்களின் தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்கப்படும்.அவர்கள் குரூப் ஏ பிரிவு ஊழியர்களுக்கு சமமாக பார்க்கப்படுவார்கள்.

அரசு ஒப்புதல் வழங்கிய இந்த சம்பள உயர்விற்கு நிதி அமைச்சகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.மேலும் ரயில்வே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மூலம் ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ 2,500 முதல் ரூ 4,000 வரை கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Trending

Exit mobile version