சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

0
151

சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டலம் மேலெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி இன்று சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஈரோடு கோவை மற்றும் நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் திருப்பூர் திண்டுக்கல் தேனி மதுரை தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை திருச்சி நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு மிதமானது முதல் கனமான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.