தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

0
110
Rain Alert
Rain Alert

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பல்வேறு இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்து  வருகிறது.

இந்த நிலையில் மழையால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுப்பதற்கு முதல்வர் நேற்று முன் தினம் அமைச்சர்கள் பலருடன் இணைந்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது 10 மற்றும்  11 தேதிகளில் தமிழகம் புதுச்சேரி திசை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்,  மேலும்  காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தஞ்சை,திருவாரூர், நாகை, தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
CineDesk