திங்கட்கிழமை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

திங்கட்கிழமை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் தற்போது மேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதால் வருகிற 28 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்த நிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஓமன் நாட்டை நோக்கி நகர்ந்தது.

இதன் காரணமாக தமிழகத்தின் ஈரப்பதத்தை காற்று ஈர்த்து செல்வதால் தமிழகத்தில் பெய்து வரும் மழை குறைந்து விட்டது. இதனால் நேற்றும், இன்றும் வெயில் அடிக்கிறது.

இதே போல் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியும் ஒடிசா நோக்கி சென்றதால் வட தமிழகத்திலும் வறண்ட வானிலை காணப்படுகிறது.

மேலும் இது பற்றி வானிலை மைய அதிகாரி கூறியதாவது.

மழை

அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி நகர்ந்து சென்று விட்டதால் தமிழகத்தில் மழை குறைந்து விட்டது. 2 நாட்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது.

வெப்பச்சலனம் காரணமாக சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய வடமேற்கு மாவட்டங்களில் மட்டும் மழையை எதிர்பார்க்கலாம்.

வங்கக்கடலில் தற்போது மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிறது. இது வருகிற 28-ந் தேதி திங்கட்கிழமை முதல் தமிழகத்திற்கு மீண்டும் மழையை தரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.வருகின்ற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Copy
WhatsApp chat