Breaking News
Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!!

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!!
சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் இன்றிலிருந்து உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர்,காட்பாடி,அரக்கோணம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, ஆவடி ஆகிய சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் இந்த கட்டண உயர்வு இன்றிலிருந்து ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அடுத்த நான்கு மாதத்திற்கு,ஆயுத பூஜை, தீபாவளி,கிறிஸ்துமஸ், பொங்கல் என பண்டிகை தினங்கள் அதிகமாக உள்ளதால், இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.