பயணிகளுக்கு ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு!! தீபாவளிக்கான முன்பதிவு இந்த தேதியில் தொடக்கம்!! 

0
94
Railway department's important announcement for passengers!! Booking for Diwali starts on this date!!
Railway department's important announcement for passengers!! Booking for Diwali starts on this date!!

பயணிகளுக்கு ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு!! தீபாவளிக்கான முன்பதிவு இந்த தேதியில் தொடக்கம்!! 

வருகின்ற தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயில் முன்பதிவு டிக்கெட் தொடங்க உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக அவர்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு வசதியை பயன்படுத்துவர். பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த முன்பதிவு செய்யப்படுகிறது.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் விருப்பம் பெரும்பாலும் ரயில் பயணமாகவே இருக்கும். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பாக சுமார் 3லட்சம் பேர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

எனவே பொது மக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே வருகின்ற ஜூலை 12 ஆம் தேதியில் இருந்து ரயில் டிக்கெட்  முன்பதிவு செய்யும் வசதி தொடங்குகிறது. இதுப் பற்றி ரயில்வே துறை அதிகாரி கூறுகையில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை  12-ஆம்  தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

அதன்படி ஜூலை 12-ஆம்  தேதி முன்பதிவு செய்பவர்களுக்கு நவம்பர் 9-ஆம்  தேதியும்,     13-ஆம்  தேதி முன்பதிவு செய்பவர்களுக்கு  நவம்பர் 10ஆம்  தேதியும், 14- ஆம் தேதி முன்பதிவு செய்பவர்களுக்கு நவம்பர் 11-ஆம்  தேதியும், 15-ஆம்  தேதி முன்பதிவு செய்பவர்களுக்கு நவம்பர் 12-ஆம்  தேதியும், 16- ஆம் தேதி முன்பதிவு செய்பவர்களுக்கு நவம்பர் 13-ஆம்  தேதியும், 17-ஆம்  தேதி முன்பதிவு செய்பவர்களுக்கு நவம்பர் 14- ஆம் தேதியும், 18-ஆம்  தேதி முன்பதிவுசெய்பவர்களுக்கு  நவம்பர் 15- ஆம் தேதியும் பயணம் செய்யலாம்.

அதேபோல வட இந்திய ரெயில்களின்  முன்பதிவு தேதியில் ஒன்று அல்லது 2 நாட்கள் மாறுதல் இருக்கலாம். காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு தொடங்கும். இந்த வருடம் தீபாவளி ஞாயிற்றுக் கிழமை வருவதால் வியாழக் கிழமையில் இருந்தே பொதுமக்கள் அவர்களது ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். எனவே கடைசி நேரத்தில் கூட்ட நெருக்கடியில் நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்வது அவசியம்.