லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை! தப்பிப்பாரா முன்னாள் அமைச்சர்?

0
173

திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்த உடனேயே முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்களை தோன்ட ஆரம்பித்துவிட்டது. அதோடு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களின் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள சொன்னது திமுக ஆனால் அப்போது அதிமுக ஆளுங்கட்சியாக இருந்ததாலோ, என்னவோ தெரியவில்லை ஆளுநர் அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் கடுப்பாகிப் போன திமுக தலைமை ஆளுநரை விமர்சனம் செய்து அறிக்கையும் விட்டது. இப்படியான சூழ்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. ஆட்சியில் அமர்ந்த மறுநிமிடமே அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல் பட்டியலை தயார் செய்ய தொடங்கியது.

அதில் முதலில் அகப்பட்டவர் அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்ஆர் விஜயபாஸ்கர் சமீபத்தில் அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் பல ஆவணங்கள் சிக்கியதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தரப்பிலோ அவர்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. அவர்கள் தெரிவித்த அனைத்தையும் நாங்கள் அவர்களிடம் சமர்ப்பித்து விட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இது நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொடர்பு உடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகிறார்கள். கோயம்புத்தூரில் இருக்கின்ற வேலுமணியின் வீட்டில் 10க்கும் அதிகமான அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் வேலுமணி நெருக்கமாக இருந்த சிலர் வீடு உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.அரசு ஒப்பந்த பணிகள் வாங்கி கொடுப்பதாக தெரிவித்து ரூபாய் 1.25 கோடி மோசடி செய்திருப்பதாக எஸ்பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடந்து வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.