மே 21ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகை!! இதற்குத்தான் தமிழகம் வருகிறாரா??

0
148
Rahul Gandhi to visit Tamil Nadu on May 21!! Is Tamil Nadu coming for this??
Rahul Gandhi to visit Tamil Nadu on May 21!! Is Tamil Nadu coming for this??
மே 21ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகை!! இதற்குத்தான் தமிழகம் வருகிறாரா??
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மே 21ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21ம் தேதி தமிழகம் வரும் இராகுல் காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது தந்தை இராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்  பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் அவர்களும் பதவியேற்க உள்ளனர்.
இவர்களின் பதவியேற்பு விழா வரும் சனிக்கிழமை அதாவது மே 20ம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த பதவியேற்பு விழா முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தமிழகம் வருவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
பதவியேற்பு விழா முடிந்த பிறகு மே 21ம் தேதி ராகுல் காந்தி அவர்கள் சென்னை வருகிறார். அவரது தந்தை இராஜிவ் காந்தி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இராஜிவ் காந்தி அவர்களது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.