பிரதமரை விளாசிய ராகுல்காந்தி!

0
86

மோடியின் ஆட்சியில் திருட்டும் சீர்திருத்தமும் ஒன்றுதான் என மத்திய அரசை விலாஸ் இருக்கின்றார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்தியா சீனா எல்லை மோதல் பொருளாதார மந்தநிலை வேலையில்லாத் திண்டாட்டம் விவசாயிகளின் போராட்டம் என அனைத்து பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றார் இப்போது மோடியின் ஆட்சியில் சீர்திருத்தங்களும் திருட்டும் ஒன்றுதான் என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருக்கின்றார்.

பிரதமர் நரேந்திர மோடி சென்ற சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமான பணி ஆரம்ப விழாவில் பங்கேற்ற அவர் அந்த சமயம் பேசும்போது வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியம் ஒரு புதிய ஒழுங்கு மற்றும் புதிய வசதிகள் ஆகியவற்றை வழங்குவதற்கு சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானது சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்னுடைய அரசு முழுமையாக சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகின்றது என தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சீர்திருத்தம் குறித்த பேச்சுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்து இருக்கின்றார் இது சம்பந்தமாக ராகுல் காந்தி தன்னுடைய வலைதள பக்கத்தில் மோடியின் ஆட்சியின் கீழ் சீர்திருத்தங்களும் திருட்டும் ஒன்றுதான் அதன் காரணமாக அவர்கள் ஜனநாயகத்தில் இருந்து விடுபட விரும்புகிறார்கள் என்று பதிவு செய்திருக்கின்றார்.