இராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டி?அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் திட்டம்!

0
99

இராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டி? அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் திட்டம்!

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் வெற்றி பெற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு செய்து அதில் வெற்றித் தோல்விகளை அலசி வருகின்றனர். மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பதற்கான பட்டியலையும் தயாரித்து வருகின்றனர்.

கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது. அதனால் இந்த முறை பாரதிய ஜனதா ஆட்சி அமையக்கூடாது என்பதில் காங்கிரஸ் முனைப்புடன் உள்ளது. இந்த இலக்குடன் தீவிர தேர்தல் பணிகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணயாத்திரை பல மாநிலங்களைக் கடந்து 108 நாட்களில் 49 மாவட்டங்கள் கடந்து 3122 கிலோமீட்டர் பயணித்து வந்தது தேசிய அளவில் மிகப்பெரும் கவனத்தை பெற்றது.

மேலும் மக்களவை தேர்தல் குறித்து பயண யாத்திரை பொறுப்பாளர் மற்றும் தேர்தல் வியூக பொறுப்பாளர் சுனில் உட்பட பலருடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த தேர்தலின் போது ராகுல் காந்தியை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நகர் முயற்சி செய்தனர்.

இதனிடையே தற்போது ராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக முன்பே ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.