தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்!

0
106

தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் காரணம்!

இந்திய அணி நேற்று அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது.

டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது.

இந்திய அணி கௌரவமான ஸ்கோரான 168 ரன்களை சேர்த்திருந்தாலும், இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டைக் கூட பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. இதுதான் இந்திய ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “இந்த உலகக்கோப்பையின் எல்லா நாட்களும் எங்களுக்கு நன்றாக அமைந்தன. ஆனால் இன்று மட்டும் சரியாக அமையவில்லை. ஒருவேளை நாங்கள் இன்னும் 20 ரன்கள் கூடுதலாக சேர்த்திருந்தால், வெற்றி பெற்றிருப்போம் என நினைக்கிறேன்.” எனப் பேசினார்.

மேலும் அணியில் உள்ள மூத்த  வீரர்களின் ஓய்வு குறித்து கேட்ட போது “அதைப்பற்றி இப்போதே நான் எதுவும் சொல்ல முடியாது. ஒரு கடினமான நாளில் எந்த முடிவையும் எடுக்க முடியாது” எனக் கூறியுள்ளார். அணியில் அஸ்வின், தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு இதுவே கடைசி டி 20 உலகக்கோப்பை தொடராக இருக்கும் என சொல்லப்படுகிறது.