டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! ரகானேவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு!

0
79

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை வைத்து ஆஸ்திரேலிய அணியை அதனுடைய சொந்த மண்ணிலேயே விழுத்திய ரகானேவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி டி20 ,மற்றும் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்தி அசத்தல் வெற்றியை பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்சமயம் இந்திய அணி ஆனது இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோத தன்னை தயார் செய்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியுடன் அந்த நாட்டின் சொந்த மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி விளையாட தொடங்கியது. ஆஸ்திரேலிய நாட்டின் அடிலெய்ட் மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் வெறும் 36 ரன்களே இந்திய அணி சார்பில் எடுக்கப்பட்டதால், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுலபமாக வெற்றி பெற்றுவிட்டது. அதன் பிறகு வேகத்துடன் எழுந்த இந்திய அணி அடுத்தடுத்த ஆட்டங்களில் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டால் வெற்றி அடைந்து அந்த தொடரை சமன் செய்தது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆடுகளத்தில் நடந்த 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்முடைய இந்திய வீரர்களின் தொடர் முயற்சி காரணத்தால், ஆட்டம் சமன் செய்யப்பட்டது. இதன்பிறகு ப்ரிஸ்பெயின் ஆடுகளத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் நமது இந்திய கிரிக்கெட் அணி ஆனது 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தட்டிப் பறித்தது. இதன் மூலம் இரண்டுக்கு ஒன்று என்று டெஸ்ட் தொடரை தன் வசப்படுத்தியது இந்திய அணி. பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் புஜாரா 56 ரன்களும், ரிஷப் பண்ட் 89 ரன்களும் சுப்மன் கில் 91 ரன்களும் சேர்த்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இந்த வெற்றிகளின் மூலமாக இந்திய கிரிக்கெட் அணி ,ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்தி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலமாக ஆஸ்திரேலிய நாட்டின் கடந்த 32 வருடங்களாக எந்த ஒரு அணியும் வீழ்த்த இயலாத ஆஸ்திரேலிய பலம் வாய்ந்த அணியை இந்திய அணி வீழ்த்தி மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது.இந்திய கிரிக்கெட் அணியின் இந்த வெற்றியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய நாட்டில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு சொந்த மண்ணிற்கு திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் மேளதாளத்துடன் வரவேற்று இருக்கிறார்கள் .இதில் இந்திய அணியின் பொறுப்பு கேப்டனாக செயல்பட்ட ரஹானே, மற்றும் தமிழக வீரர் தங்கராஜ் நடராஜன், போன்றோரின் வரவேற்பு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இதற்கு முன் விளையாடிய அனைத்து வீரர்களும் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறிய நிலையில், இளம் வீரர்களை அணியில் வைத்து இந்த டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றதால் இந்திய அணியின் கேப்டன் ரஹானேவை மேளதாளத்துடன் வரவேற்று இருக்கிறார்கள்.