முள்ளங்கி நெத்திலி பொரியல்! இதோ உங்களுக்காக!

0
73

முள்ளங்கி நெத்திலி பொரியல்! இதோ உங்களுக்காக!

 

தேவையான பொருட்கள் :முள்ளங்கி கால் கிலோ, நெத்திலி கருவாடு நூறு கிராம், புளிக்கரைசல் கால் கப் ,பெரிய வெங்காயம் இரண்டு நறுக்கியது, தக்காளி ஒன்று, பூண்டு பல் நான்கு, பச்சை மிளகாய் மூன்று,கறிவேப்பிலை ஒரு கொத்து, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை :

முதலில்  நெத்திலி கருவாட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு புளியை கரைத்து கொள்ள வேண்டும்.அதனையடுத்து வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், நெத்திலியைப் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். கருவாடு பொரிந்து வாசனை வந்தவுடன் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.

 

அதன் பின்பு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் மிளகாய் தூள், புளிக்கரைசலை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி இறக்க வேண்டும்.மேலும் இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட உகந்தது.

author avatar
Parthipan K