அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை! மாணவர்கள் எந்த பயமுமின்றி தேர்வை எழுதலாம்! சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!

0
67

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதோடு கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அனைவரும் முக கவசம் அணிந்து வெளியில் சென்று வருகிறார்கள். இதைத்தவிர சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவரவர் தங்களுடைய உயிரின் மீது ஆசை இருந்தால் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று முன்னரே கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழ்நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று ஆரம்பமாகி வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மாநிலம் முழுவதும் 3,98,321 மாணவர்களும்,4,38,996 மாணவிகளும் என ஒட்டுமொத்தமாக 8,37,317 பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் தயார் நிலையிலிருக்கின்றன.

இதில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எல்லோரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்குமிடையே 6 அடி இடைவெளி கட்டாயமாக இருக்கவேண்டும், கிருமிநாசினி கொண்டு தேர்வு அறைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் இது மிகவும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் மிகவும் முக்கியம், நோய்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளை தேர்வு மையங்களில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று நேற்று இரவு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் பெயரில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிக்கை ஒன்று வெளியானது.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது, பொதுத் தேர்வின் தேர்வறையில் மாணவர்கள் எல்லோரும் முக கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது என தெரிவித்திருக்கிறார்.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எந்தவிதமான அறிக்கையும் வெளியிடவில்லை மாணவர்கள் எந்தவித பதற்றமுமில்லாமல் தேர்வை எழுதலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.