விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் பிரபல நடிகர்!

0
79

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் பிரபல நடிகர்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா திரைப்படமாக லைகர் திரைப்படம் உருவாகியுள்ளது.

அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதனால் உலகளவில் இந்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

லைகர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகளைப் படக்குழு தற்போது மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி படத்தின் போஸ்டர்கள் மற்றும் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் தன்னுடைய ஸ்டுடியோ 9  நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.