முதல் பாகத்தில் சமந்தா… இரண்டாம் பாகத்தில் இவரா?…. புஷ்பா 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை!

0
101

முதல் பாகத்தில் சமந்தா… இரண்டாம் பாகத்தில் இவரா?…. புஷ்பா 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை!

புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பேன் இந்தியா ஹிட்டானது. இதையடுத்து பாகுபலி படம் போல இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் புஷ்பா தி ரூல் படத்தின் பூஜை சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது. ஏற்கனவே இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளை படமாக்கி விட்டதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில் எஞ்சியுள்ள காட்சிகளை விரைவில் படமாக்கி அடுத்த ஆண்டில் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாகத்தின் எதிர்பாராத வெற்றியால் இரண்டாம் பாகத்தில் பல மாற்றங்களை இயக்குனர் சுகுமார் செய்து வருவதாக சொல்லப்பட்டது. அதையடுத்து படத்தின் கதையை சர்வதேச நாடுகளில் நடப்பது போல மாற்றியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் சமந்தா இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடல் பேய் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அதே போல இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் பாடலில் தமன்னா இடம்பெறுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் பல முன்னணிக் கலைஞர்களும் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.