அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடுங்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்கு வேண்டுகோள்

0
61

அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடுங்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்கு வேண்டுகோள்

கொரோனோ வைரஸ் விழிப்புணர்வும் அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து தனியார் தொலைக்காட்சியில் நேரலையில் முன்னாள் மத்திய குடும்ப மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே போதிய அளவு ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. மக்கள் நடமாட்டம் நிச்சயமாக குறைக்க வேண்டும். சென்னையில் உள்ள வணிக வளாகங்களிலும் தியாகராயநகர் போன்ற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் சிறிதளவு கூட குறையாமல் உள்ளது மிகுந்த வேதனை அளிக்ககூடியதாக உள்ளது.

மற்ற நாடுகளில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் உள்ள நிலையில் இந்தியாவில்குறிப்பாக தமிழகத்தில் இந்த வைரசின் வீரியம் தெரியாமல் மக்கள் பொது வெளிகளில் உலாவுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மத்திய அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதாகவே தோன்றுகிறது எனினும் மாநில அரசும் தங்களுடைய பங்கை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நான் ஒரு மருத்துவர் என்ற முறையிலே கூறுகிறேன் இந்தியாவில் உள்ள மக்கள் தொகைக்கு இந்த வைரஸ் சிறு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட போதிய மருத்துவ வசதி இல்லாமல் பல ஆயிரம் மக்கள் இறக்க நேரிடும் ஏனெனில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் மக்கள் அடர்த்தி மிகவும் அதிகம்.

தமிழ்நாடு அரசு அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும் மக்கள் பொருப்புணர்வுடன் செயல்பட வேண்டும். போருளாதாரத்தை விட உயிர் மிகவும் முக்கியம். பொருளாதாரம் எத்தகைய இழப்பை சந்தித்தாலும் பரவாயில்லை மக்கள் உயிரை காப்பதே நமது முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டும்.

இவ்வாறு கொரோனோ வைரஸ் குறித்து யாருமே அறியாத பல்வேறு கருத்துக்களை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் புள்ளி விவரத்துடன் எடுத்துறைத்தார்.

author avatar
Parthipan K