ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!

0
108

முன்னாள்  முதல்வர்  ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர்  5’ம்  தேதி மரணமடைந்தார்.  அவரது  மறைவிற்கு பின் அவரது தோழியான சசிகலா பிப்ரவரி மாதம் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும் தன்னுடையது தான் என, சசிகலா சொந்தம் கொண்டாட துவங்கி உள்ளார்.

இந்நிலையில்  ” ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும், ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க, அ.தி.மு.க., அரசை வலியுறுத்துவேன்,” என்றும் அ.ம.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

சேலத்தில் நேற்று, நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் “ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை, சசிகலா, ஜெ.தீபா உள்ளிட்ட யாரும், சொந்தம் கொண்டாட முடியாது. சொத்துக்குவிப்பு  வழக்கில் பறிமுதலான சொத்துகள், சட்ட ரீதியாக, அரசுடைமையாக்க வேண்டும். அது, யாருக்கும் சொந்தமல்ல என, தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமையாக்க, முதல்வர் பழனிசாமி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.

ஜெயலலிதாவின் சொத்துகள், ஏழைகளை சென்றடைய வேண்டும். அதை, வேறு யாரும் அனுபவிக்க முடியாது. அதனால், அவரது சொத்துகளை கையகப்படுத்த, அரசுக்கு எந்த தடையும் இல்லை. இல்லையெனில், நீதிமன்றத்தை நாடுவேன். இதுகுறித்து, அ.தி.மு.க.,வினர் கருத்து தெரிவிக்காதது ஏன்?  என தெரியவில்லை. விடுபட்ட ஒன்பது மாவட்டங்கள் உள்பட, ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்பு தேர்தல் முடியும் நிலையில், அ.ம.மு.க., கட்சி காணாமல் போய்விடும். காலம் கனியும்போது, நான், அ.தி.மு.க.,வில் இணைவேன்”  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

author avatar
Parthipan K