புதுவையில் ஆட்சிப்பொறுப்பில் பங்கெடுக்கும் பி.ஜே.பி!

0
64

புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்த பின்னர் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர் .காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்தித்தது. ஆகவே என்.ஆர். காங்கிரஸ் கட்சி பத்து பகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 6 தொகுதிகளிலும், வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது. முதலமைச்சராக ரங்கசாமி நேற்றையதினம் பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி துணை முதலமைச்சர் உட்பட மூன்று அமைச்சர்கள் பதவி பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கப்பட்டது. அவர்கள் விரைவில் பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் மூன்று தினங்களுக்கு முன்னால் சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது புதுச்சேரியில் இதுவரையில் துணை முதலமைச்சர் பதவி என்பது ஒன்றுமில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு மத்திய அரசின் வழிகாட்டுதலும் ஒப்புதலும் இல்லை என்றும், ஒருவேளை மத்திய அரசு கேட்டுக் கொண்டால் அது தொடர்பாக பரிசீலனை செய்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் பொருத்தவரையில் முதலமைச்சர் ரங்கசாமி மட்டும்தான் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர்கள் பதவியேற்பது தொடர்பாக விசாரணை செய்த சமயத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதற்கான சட்டத்தையும், வழிகாட்டு நெறிமுறைகளையும், மத்திய உள்துறை அமைச்சகம் தான் அமைக்கவேண்டும் அதற்காக தான் காத்திருக்கிறோம் என்று சொல்லப்படுகிறது. என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வட்டாரத்தில்.