சரிந்த திமுக கூட்டணி! தலையில் கைவைத்து உட்கார்ந்த ஸ்டாலின்!

0
84

தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் திமுக கூட்டணியில் தற்சமயம் முறையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் என்னதான் திமுக கூட்டணி கட்சிகளுடன் சுமுகமான ஒரு நிலையை கடைப்பிடிப்பது போல வெளியில் காட்டிக் கொண்டாலும், அந்த கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக சிக்கலில் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்று சொல்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.. தற்போது தொகுதி இறுதி செய்யப்பட்ட இருக்கும் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் திமுக மீது அதில் தான் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுக உடனான தொகுதி பங்கீட்டில் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அநேகமாக இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கும் சின்னம் கிடைக்கப்போவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனென்றால் சுமார் 5% தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனிச் சின்னம் பெற முடியும் இல்லை என்றால் தேர்தல் ஆணையம் கொடுக்கும் பொதுச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாக இருக்கிறது.

அதேபோல திருமாவளவன் தன் சொந்த கட்சி சின்னத்தில் நிற்பதற்கு தான் முனைப்பு காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.ஆனாலும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களே உதயசூரியன் சின்னத்தில் அவரை நிற்க வைத்து விடலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே தொகுதி பங்கீடு தொடர்பாக சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று திருமாவளவன் வருத்தத்தில் இருந்து வருகின்றார். இந்த நிலையில், அவர் விரும்பும் சின்னத்தில் கூட நிற்பதற்கு திமுக அனுமதி அளிக்கவில்லை என்பது திருமாவளவனுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே இதுவரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், விரைவில் திமுக கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் தற்சமயம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியை விட்டால் வேறு வழி இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது .ஒருவேளை திமுக கூட்டணியை விட்டு அவர் வெளியேறினால் சொல்லிக்கொள்ளும்படியாக அவர் சென்று சேர்வதற்கு பலமான கூட்டணி இல்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது. அப்படி பார்த்தோமானால் அதிமுக பக்கம் நிச்சயமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வர இயலாது. அதிமுக, திமுக என்ற இந்த இரு கூட்டணிகளை தவிர்த்து வேறு ஒரு பலமான கூட்டணி தமிழகத்தில் இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

ஆகவே திமுக கூட்டணி பலமாக இருப்பதாக வெளியில் காட்டிக் கொண்டாலும். அது உள்ளுக்குள் மிக பலவீனமாக இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள் எனவே தற்சமயம் அதிமுகவை எதிர்த்து தைரியமாக களம்காண்பதை காட்டிலும் ,தன்னுடைய கூட்டணியை பலப்படுத்துவதிலேயே திமுக தலைமை முழுமூச்சாக இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் அந்தக் கூட்டணியை அதிமுக அளவிற்கு பலமான கூட்டணியாக வடிவமைக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.