குமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல 3 நாட்கள் தடை விதித்த மாவட்ட நிர்வாகம்!

0
84

இன்னும் ஒரு சில வாரங்களில் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்கள் வரவிருக்கிறது, அதனை கருத்தில் கொண்டு சமீபத்தில் தமிழக அரசு சார்பாக ஊரடங்கு உத்தரவில் ஒரு சில நெறிமுறைகள் சேர்க்கப்பட்டனர்.

அதன்படி புத்தாண்டு அன்று கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் விதித்திருந்தார். தற்போது புதிய வகை நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக, இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை என்றால் வருடம்தோறும் விமர்சையாக தமிழகத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டு காலமாக இந்த நோய்த்தொற்று பரவல் இருப்பதால் பெரிய அளவில் இந்த விழாக்களை யாராலும் கொண்டாட முடியவில்லை, ஆகவே பொதுமக்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

அதேசமயம் பொதுமக்களின் கொண்டாட்டத்தை விட பொதுமக்களின் உயிர் தான் முக்கியம் என்று கருதும் மத்திய, மாநில அரசுகள் இவற்றையெல்லாம் சற்று பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூலாக பதில் சொல்கிறது.

அந்த விதத்தில் குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு 31ம் தேதி முதல் மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க கன்னியாகுமரி உட்பட அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் நீர்வீழ்ச்சி பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களிலும், பொதுமக்கள் வருகின்ற 31ம் தேதி முதல் ஒன்றாம் தேதி மற்றும் 2 உள்ளிட்ட தேதிகளில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது என கூறப்பட்டு உள்ளது.

அன்றைய தினங்களில் கன்னியாகுமரி, பூம்புகார் படகு சேவை, நீர்வீழ்ச்சி மற்றும் கடல் பகுதியில் படகு சேவை, உள்ளிட்டவை இயங்குவதற்கு அனுமதி கிடையாது பொதுமக்கள் நோய்த்தொற்றின் தீவிரத்தை உணர்ந்து கொண்டு மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியிருக்கிறார்.

கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் திறந்து அனைத்து அறைகளையும் காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் அதிகமாக கடைகள் வணிக நிறுவனத்திற்கு உள்நுழை வதை கடை நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நிற்க போதுமான நடவடிக்கைகளை கடை நிர்வாகத்தினர் முன்னெடுக்க வேண்டும், இது போன்ற நிபந்தனைகளை மேலும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் கடைகள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் முன்பு பொதுமக்கள் வரிசையாக நிற்க அடையாளம் வரைந்து கண்காணிப்பு நடக்கவேண்டும், நோய்த்தொற்று பரவலின் புதிய மாறுபாடு ஏற்பட்ட புதிய வகை வைரஸ் குமரி மாவட்டத்திற்கு பரவாமல் தடுப்பதற்கு புதிய நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக சேரும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல், உள்ளிட்ட வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் தவறாமல் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் அந்த விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப் படுகிறது எனக் கூறியிருக்கிறார். நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்தல், உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.