புதுவரவால் வந்த மன வருத்தம்! கடும் கோபத்தில் முதலமைச்சர் சிக்கலில் பிடிஆர்!

0
54

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சுமார் 10 ஆண்டு காலத்திற்கு பின்னர் தற்போது நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இதனால் ஸ்டாலின் அவர்களும் திமுகவின் உடன்பிறப்புகளும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி தமிழகத்தின் முதல் அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடைய அமைச்சரவையில் பல அனுபவம் வாய்ந்த அமைச்சர்களும், பல புதுமுக அமைச்சர்களும், பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அதோடு பல மூத்த தலைவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பதால் அவர்கள் வருத்தத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையில் நிதித் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் பிடிஆர் தியாகராஜன் அவர் மீது கடந்த சில தினங்களாகவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

இந்தநிலையில், அவர் தன் மீதான விமர்சனங்களை தெரிவிக்கும் பாஜகவின் தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அதிமுகவின் முக்கிய தலைவருமான விஜயகுமார் உள்ளிட்ட பலர் மீதும் கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்து வருகிறார் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன். ஒரு ஆங்கில சேனலுக்கு இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்ததற்காக திமுகவின் செய்தி தொடர்பாளரான டிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் கூட மிக கடுமையான வார்த்தைகளால் வலப்பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரன் பி டி ஆர் தொடர்பாக ஒரு சில முக்கிய விஷயங்களை அந்த கட்சியின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்களிடம் கூறியிருக்கின்றார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருந்த மகேந்திரன் சமீபத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அவர் திமுகவில் இணைவதற்கான விழா மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவரை குறிப்பிட்டு பல புகழ்ச்சி வார்த்தைகளை தெரிவித்திருக்கிறார். இது கொங்குமண்டல திமுகவைச் சேர்ந்தவர்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு மகேந்திரனை ஸ்டாலின் புகழ்ந்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு திமுகவின் இணையதள குழுவின் மாநில இணைச்செயலாளர் என்ற பதவியை வழங்கினார் ஸ்டாலின். திமுகவின் இணையதள குழுவின் மாநிலச் செயலாளராக இருந்து வருபவர் நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் என்று சொல்லப்படுகிறது.

இதன் பின்னணியில் ஒரு சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து இருக்கின்றார் மகேந்திரன். நீங்கள் எனக்கு இணையதள குழுவின் மாநில இணைச் செயலாளராக பதவி வழங்கினீர்கள் இணையதள மாநிலச் செயலாளராக இருக்கும் டிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இடம் தகவல் தெரிவிக்காமல் என்னை நியமனம் செய்து விட்டீர்கள் என்று கோபம் அவருக்குள் இருக்கிறது போல என தெரிவித்து இருக்கிறார்.

மாநிலச் செயலாளர் என்ற முறையில் அவரை சந்திப்பதற்காக தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டேன் என்னிடம் அவர் கோபமாகவே உரையாற்றினார். சிஐடி காலனியில் இருக்கும் ஐடி விங் அலுவலகத்தில் தங்களை சந்திக்க வரலாமா? என்று கேட்டேன் அது எங்களுடைய பார்த்துவிட்டு சொத்து நீங்கள் அறிவாலயத்திற்கு வந்து பாருங்கள் என கோபமாக குறிப்பிட்டிருக்கிறார். அறிவாலயத்திற்கு வந்தால் அவருடைய அலுவலகம் பூட்டி இருக்கின்றது என கூறியிருக்கிறார் மகேந்திரன்.

அத்தோடு நான் மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த சமயத்திலும் சமூக வலைதள விவகாரங்களையும் நான் கையில் எடுத்து இருந்தேன் அங்கே சுமார் 2 லட்சம் பேரை கட்சிக்காக சமூக வலைதளங்களில் சாதகமாக வைத்திருந்தேன். சிறிய கட்சியான அந்தக் கட்சியிலேயே அப்படி என்றால் இவ்வளவு பெரிய கட்சியான திமுகவில் அந்த இடத்தில் சுமார் 26 ஆயிரம் நபர்கள் தான் உள்ளார்கள். இங்கேயும் என்னால் லட்சக்கணக்கான இளைஞர்களை சமூக வலைதளங்களில் திமுகவிற்கு ஆதரவாக வைத்திருக்க இயலும் அந்த விதத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது இங்கேயும் என்னால் லட்சக்கணக்கான இளைஞர்களை சமூகவலைதளங்களில் நமக்கு ஆதரவாக வைத்திருக்க இயலும் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால் அணியின் செயலாளர் பழனிவேல் தியாகராஜன் என் மீது கோபமாக உள்ளார் நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள் என்று ஸ்டாலினிடம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார் மகேந்திரன்.

அதோடு மட்டுமல்லாமல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரிடம் பேசிய ஸ்டாலின் தொடர்பான உரையாடல்கள் வெளியிட்டு அவற்றை ஒரு சில வார்த்தைகளையும் பதிவு செய்து ஸ்டாலினிடம் போட்டு காட்டியிருக்கின்றார் மகேந்திரன். இதைக் கேட்ட முதலமைச்சருக்கு கடுமையான அதிர்ச்சி உண்டாகியிருக்கிறது. ஏன் இவர் இப்படி நடந்துகொள்கின்றார் என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனை அடுத்து பழனிவேல் தியாகராஜன் இடமிருக்கும் ஐடி விங் மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து அவரை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், இல்லையென்றால் அவரை அவரை விடுவித்து விடலாம் என்ற உத்தரவைப் போட்டு இதனை டிடிஆர் தியாகராஜனுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றார்.

அவ்வாறு இருக்கும்போது பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சரின் ஒரே மருமகனான சபரீசன் அவர்களும் நெருங்கிய உறவினர்கள் என்ற காரணத்தால், தற்சமயம் சபரீசன் மூலமாக ஸ்டாலின் கோபத்தை தடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.